மரணவாசலிலும்
பகைவனிடம் மண்டியிட்டதில்லை
மானம் மரணிக்கும்முன்
மரித்துப்போவான் மறத்தமிழன்
ஒரு கோழையிடம் மண்டியிடுவதா!
தமிழ்தாய் பெற்ற வீரமக்கள் நாங்கள்
தலையை தந்தாயினும்
தன்மானம் காப்போம்
வாழ்ந்து வரலாறு படைத்தோம்
சற்றே புரட்டிப்பார் அதன் ஏடுகளை
மண்டியிட்டது யார்?
மாட்சியடைந்தது யார்?
வீரசொர்கம் யாரின் இருப்பிடம்? என்று புரியும்
மானத்திற்காக மறிப்பவர்கள் நாங்கள்!
இழப்பதற்கு இருப்பது உயிர் மட்டும்
காப்பதற்கு மானமுண்டு!
அடைவதற்கு இலட்சியமுண்டு!
வெல்வதற்கு நீயும் உண்டு.
காத்திரு !
எங்கள் எழுச்சி தொலைவில்லை!
அழிவு உன் அருகிலுண்டு
உலகம் எங்களிடம் மண்டியிடும் நாள் தூரமில்லை!
என்ன விலைகொடுத்தாலும்
சுவாசித்தே தீருவோம் சுதந்திரக்காற்றை!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment