ஆயிரமாயிரம் மக்களின் மரணம்
வாய்திறக்காத தலைமைகள்
மேல் எழும் தீயில் தன்னை துறந்த சகோதரன்
உணவை மறுத்த சகோதரி
இவையாவும் எம்மையாலும்
கல் சிலைகளின் கண்ணைத் திறக்கவில்லை
எத்தனை நாடகங்கள்
எத்தனை போரட்டங்கள்
எத்தனை பதவி துறப்பு
எத்தனை போர் நிறுத்த அறிவிப்பு
எத்தனை கடிதங்கள்
எத்தனை அறிக்கைகள்
இவையாவும் காலத்தை கடத்தவா
என் இனத் தலைவரே
உணர்ந்து கொண்டோம் உம் நிறத்தை
ஆம்!
இத்தாலிய மொழி
தன்மானத் தமிழின் தாயான போதும்,
தியாகத்தின் சின்னமான போதும்.
கடல் பிரித்திருக்கும் என் உறவுகள்
கண்ணீரில் வாட
உணவு மருந்தானது
மருந்து மாயையானது
மானத்திற்காக மரணித்த சகோதரியின் மரணமும்
உமக்கு வெறும் அதிர்வுகளாகிப்போனது ஏன்?
இவையாவும் எமக்கு இன அழிப்பானது ஏன்?
எது பயங்கரவாததிற்கு எதிரான போர் ?
யார் பயங்கரவாதிகள் ?
கருவுற்றிருக்கும் தாயும்
அக்கருவில் இருக்கும் சிசுவும்
தம்பின் பசிக்காக கையேந்தும் தமக்கையும்
பால் மணம் மறவா பிஞ்சும்
சிங்கள வெறியர்களுக்கு பயங்கரவாதிகள்
நமக்கு இவர்கள் நாளைய தமிழின் அடையாளம்
எம் உறவுக்காக
என் கைகள் நீளும்
நான் உறக்க பேசுவேன்
இதை தடுப்பது இந்திய இறையாண்மையானால்
நான் இந்தியனில்லை
எனக்கு இறையாண்மையும் இல்லை
நான் தமிழன்
Tuesday, May 12, 2009
Subscribe to:
Comments (Atom)