கரை மீது கொண்ட காதலால்
அதை அணைத்துப் போனது கடலலை
என்று முடியும் இந்த காதல் போராட்டம்
கரை ஏற்றுக் கொள்ளுமா அலையின் காதலை?
கடல் மீது கொண்ட காதலால்
கடலை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தான் கதிரவன்
காதலியை தழுவப்போவதை எண்ணியதால்
அவன் முகம் நாணத்தால் சிவந்திருந்தது
கதிரவனின் ஒரு நாள் பிரிவையும் தாங்கமுடியா கடல்
தன் காதலனாயை எட்டி அணைக்க முயன்று கொண்டிருந்தாள்
இவர்களின் காதல் விளையாட்டை
கரையில் நின்ற கலங்கரை விளக்கு
கண் சிமிட்டி பார்த்துக் கொண்டிருந்தது.
அழ்கடலின் அரவாரத்துடன், மக்களின் விசும்பல் கலந்திருந்தது
கைகளில் வலையுடன் கண்களில் நீருடன்
விடைபெறும் இவர்கள் மீனவர்கள்.
நாளை உதயம் பார்ப்போம் என்ற நம்பிக்கையுடன்
கடலாடும் மனிதர்கள் இவர்கள்
கட்டிய மனைவி கண்ணீருடன் வழியனுப்ப
கடலொடும் இவர்கள் நாளை கரைகாண்பது யார் கையில்
கரையில் காத்திருக்கும் காதல் மனைவிக்கு
நாளைய பரிசு அன்புக் கணவனின் முத்தமா அல்லது
துப்பாக்கித்தோட்டா முத்தமிட்ட அவனது உயிரற்ற உடலா ?
துருவ நட்சத்திரத்தை துணையாக்கி
பயணப்படும் இவர்கள்
தன் காதலிக்கு கூறிய ஆறுதல் வார்த்தைகள்
" ஆழ்கடலில் மூழ்கினாலும் கலங்காதே என் கண்ணே
உன்காது மடலில் முத்தமிடும் முத்தாவேன்
உன்காதோடு காதலுடன் கவிதைபாடுவேன் என்றென்றும் "
ஆறுதல் வார்த்தைகள் அழுகையை வரவைத்தது ஏன்?
தண்ணீரில் ஓடமிடும் இவர்கள் கண்ணீரில் வாழும் மீன்களானது ஏன்?
கண்ணைப்பறிக்கும் மின்னலில்
கடலில் மீன் பறிக்கும் இவர்களுக்கு
சுனாமியும், சுறா மீனும் ஒன்றுதான்
இவர்கள் நீலக்கடலில் வலைவீசிப் பிடிப்பது
நாளைய வாழ்வின் வசந்தத்தை!
எல்லையில்லா அன்பு கொண்ட கடலுக்கு
எல்லை வகுத்தவர்கள் யார்?
அவர்கள் தன் தாயின் அன்பிற்கும்
எல்லை வகுத்திருப்பார்கள்
எங்கும் நீர் நிரம்பிய கடலில்
இவர்களால் எவ்வாறு எல்லைக் கோடிடமுடிந்தது
எல்லை தாண்டிய இவர்கள் மேல்
இலங்கை வீரர்களுக்கு இரக்கம் இல்லாமல் போனது ஏன்?
மனிதனை மனிதனாய் மதிக்க தெரியாதவர்கள்
மகிந்தனின் வீரர்களாய் இருப்பதில் வியப்பில்லை!
அலைகடலுடன் போராடும் எங்களை
ஆயுதம் எடுத்து போராடவைக்காதீர்கள்
முடிவென்பது ஒன்று உண்டு
அது எங்கள் அமைதிக்கும் உண்டு
Thursday, August 21, 2008
Wednesday, August 6, 2008
கண்ணீர்
அறியாத வயதில்
புரியாமல் உன்னுடன் பழகினேன்
தாய் ஏளனமாய் கேட்டபோது
உன்னையே கல்யானம் செய்வேன் என்றேன்
காலங்கள் கடந்து, நான்
கல்லுரிக்கு பயணிக்கும் முன்
என் கழுத்தைக்கட்டிக்கொண்டு கண்ணீருடன்
"என்னை மறந்திடாதீங்க மாமா" என்றாய்
உன் கையில் சத்தியம் செய்தேன்
"தாய்மொழியை மறந்தாலும்
உன்னை மறவேன்" என்று
அழகான உன் கண்ணீரில் இரு துளிகளை
என் கைக்குட்டையில் ஏந்தி
உன் நினைவாய்
இம்முத்துக்களை எடுத்துக்கொள்கிறேன் என்றேன்
பூவாய் சிரித்தாய்
இப்போதும் கண்ணீர் துளிர்த்தது
ஆனால் ஆனந்தமாய்
கல்லூரி விடுமுறையில்
வீட்டிற்கு பயணம்
உன் நினைவுகளை சுமந்தபடி
வீட்டின் வாசலில்
என்னை தேடும் கண்களையே
எப்போதும் என் கண்கள் தேடும்
அழகான உன் கரு இரு விழிகளை
என் விழிகள் நோக்கினால்
அவை நிலம் நோக்கும்
நான் புன்னகையுடன், நாணமும்
உன்னைப்போல அழகென்றேன்
நான்கு ஆண்டுகள் முடிவில்
கல்லூரி தோழியுடன்
வீட்டிற்கு வந்தேன்.
என் தேவதையை அவளுக்கு அறிமுகப்படுத்த!
என்னை பார்த்து சிரித்த விழிகள்
என் தோழியை பார்த்து அழ ஆரம்பித்தது
தோட்டத்தில் இருந்த என் செல்ல மரத்தை
கட்டிக்கொண்டு அழுது கொண்டிருந்தாய்
நான் சிரித்து விட்டு
"முகம் காட்ட வேண்டிய நிலா
இன்று ஏன் முதுகு காட்டிக் கொண்டிருக்கிறது" என்றேன்
முன்னமும் வேகமாய் அழுதாய்
உன் பாசமும் அழகென்றேன் !
உன் கண்ணீர் மழை அருவியானது
என் கைகுட்டையில் இருந்த
இரு கண்ணீர் கரைகளைக் காட்டி
என் கண்கள் இங்கிருக்கும்போது
இன்னொரு பெண்ணை எவ்வாறு பார்க்கும் என்றேன்
என் கழுத்தைக்கட்டிக்கொண்டு
சத்தமாய் அழுதாய்
ஆனால் ஆனந்தமாய் !
நான் தேற்ற வேண்டுமென்று மீண்டும் அழுதாய்
உன்னை தேற்றாமல் காதலித்துக்கொண்டிருந்தேன் கண்ணீருடன்.
நம்மை வாழ்த்தி கண்ணீர் போல
பன்னீர் பூக்களை செறிந்தது
நான் வளர்த்த செல்ல மரம்.
புரியாமல் உன்னுடன் பழகினேன்
தாய் ஏளனமாய் கேட்டபோது
உன்னையே கல்யானம் செய்வேன் என்றேன்
காலங்கள் கடந்து, நான்
கல்லுரிக்கு பயணிக்கும் முன்
என் கழுத்தைக்கட்டிக்கொண்டு கண்ணீருடன்
"என்னை மறந்திடாதீங்க மாமா" என்றாய்
உன் கையில் சத்தியம் செய்தேன்
"தாய்மொழியை மறந்தாலும்
உன்னை மறவேன்" என்று
அழகான உன் கண்ணீரில் இரு துளிகளை
என் கைக்குட்டையில் ஏந்தி
உன் நினைவாய்
இம்முத்துக்களை எடுத்துக்கொள்கிறேன் என்றேன்
பூவாய் சிரித்தாய்
இப்போதும் கண்ணீர் துளிர்த்தது
ஆனால் ஆனந்தமாய்
கல்லூரி விடுமுறையில்
வீட்டிற்கு பயணம்
உன் நினைவுகளை சுமந்தபடி
வீட்டின் வாசலில்
என்னை தேடும் கண்களையே
எப்போதும் என் கண்கள் தேடும்
அழகான உன் கரு இரு விழிகளை
என் விழிகள் நோக்கினால்
அவை நிலம் நோக்கும்
நான் புன்னகையுடன், நாணமும்
உன்னைப்போல அழகென்றேன்
நான்கு ஆண்டுகள் முடிவில்
கல்லூரி தோழியுடன்
வீட்டிற்கு வந்தேன்.
என் தேவதையை அவளுக்கு அறிமுகப்படுத்த!
என்னை பார்த்து சிரித்த விழிகள்
என் தோழியை பார்த்து அழ ஆரம்பித்தது
தோட்டத்தில் இருந்த என் செல்ல மரத்தை
கட்டிக்கொண்டு அழுது கொண்டிருந்தாய்
நான் சிரித்து விட்டு
"முகம் காட்ட வேண்டிய நிலா
இன்று ஏன் முதுகு காட்டிக் கொண்டிருக்கிறது" என்றேன்
முன்னமும் வேகமாய் அழுதாய்
உன் பாசமும் அழகென்றேன் !
உன் கண்ணீர் மழை அருவியானது
என் கைகுட்டையில் இருந்த
இரு கண்ணீர் கரைகளைக் காட்டி
என் கண்கள் இங்கிருக்கும்போது
இன்னொரு பெண்ணை எவ்வாறு பார்க்கும் என்றேன்
என் கழுத்தைக்கட்டிக்கொண்டு
சத்தமாய் அழுதாய்
ஆனால் ஆனந்தமாய் !
நான் தேற்ற வேண்டுமென்று மீண்டும் அழுதாய்
உன்னை தேற்றாமல் காதலித்துக்கொண்டிருந்தேன் கண்ணீருடன்.
நம்மை வாழ்த்தி கண்ணீர் போல
பன்னீர் பூக்களை செறிந்தது
நான் வளர்த்த செல்ல மரம்.
குழந்தை தொழிலாளர்கள்
இளந்தளிராய் இப்பூமியில்
இளையுதிர் காலத்தில் பிறந்தோம்
வளரும் முன் வீழ்ந்து போனோம்
குழந்தை தொழிலாளர் என்ற அடையாளமாய்
பிறக்கும் போதே தேய்பிறையானோம்
வாழ்க்கை விடியாத நீண்ட இரவானது
வறுமையின் வரபிரசாதமாய்
பிறக்கும்போதே நாங்கள் தொழிலாளர்களானோம்
கண்கள் நிறைய கனவுகளுடன்
வாழ்க்கை நிறைய வறுமையுடன்
வாழும் நாங்கள்
நாளைய இந்தியாவின் நம்பிக்கை
இந்தியாவின் எதிர்காலம்
குழந்தைகளின் கையில்
எங்களின் கையிலோ குப்பைகள்
தங்கையின் பசிக்காக
தந்தையின் குடிக்காக
தாயின் மருந்துக்காக
இப்படி எதோ ஒரு காரணத்திற்காக
நாங்கள் ஆக்கப்பட்டோம் தொழிலாளர்களாய்
விடியலை நோக்கி ஒரு பயணம்
விடியும் முன்
திசை தெரியா வாழ்க்கை கடலில்
கல்வி என்னும் துடுப்பில்லா பயணம்
எங்களுக்கு
கை கொடுங்கள்
கல்வி கொடுங்கள்
கடவுளாவீர்கள்
இளையுதிர் காலத்தில் பிறந்தோம்
வளரும் முன் வீழ்ந்து போனோம்
குழந்தை தொழிலாளர் என்ற அடையாளமாய்
பிறக்கும் போதே தேய்பிறையானோம்
வாழ்க்கை விடியாத நீண்ட இரவானது
வறுமையின் வரபிரசாதமாய்
பிறக்கும்போதே நாங்கள் தொழிலாளர்களானோம்
கண்கள் நிறைய கனவுகளுடன்
வாழ்க்கை நிறைய வறுமையுடன்
வாழும் நாங்கள்
நாளைய இந்தியாவின் நம்பிக்கை
இந்தியாவின் எதிர்காலம்
குழந்தைகளின் கையில்
எங்களின் கையிலோ குப்பைகள்
தங்கையின் பசிக்காக
தந்தையின் குடிக்காக
தாயின் மருந்துக்காக
இப்படி எதோ ஒரு காரணத்திற்காக
நாங்கள் ஆக்கப்பட்டோம் தொழிலாளர்களாய்
விடியலை நோக்கி ஒரு பயணம்
விடியும் முன்
திசை தெரியா வாழ்க்கை கடலில்
கல்வி என்னும் துடுப்பில்லா பயணம்
எங்களுக்கு
கை கொடுங்கள்
கல்வி கொடுங்கள்
கடவுளாவீர்கள்
Subscribe to:
Comments (Atom)