Wednesday, August 6, 2008

க‌ண்ணீர்

அறியாத‌ வ‌ய‌தில்
புரியாம‌ல் உன்னுட‌ன் ப‌ழ‌கினேன்
தாய் ஏள‌ன‌மாய் கேட்ட‌போது
உன்னையே க‌ல்யான‌ம் செய்வேன் என்றேன்
கால‌ங்க‌ள் க‌ட‌ந்து, நான்
க‌ல்லுரிக்கு ப‌ய‌ணிக்கும் முன்
என் க‌ழுத்தைக்க‌ட்டிக்கொண்டு க‌ண்ணீருட‌ன்
"என்னை ம‌ற‌ந்திடாதீங்க‌ மாமா" என்றாய்
உன் கையில் ச‌த்திய‌ம் செய்தேன்
"தாய்மொழியை ம‌ற‌ந்தாலும்
உன்னை ம‌ற‌வேன்" என்று
அழ‌கான உன் க‌ண்ணீரில் இரு துளிக‌ளை
என் கைக்குட்டையில் ஏந்தி
உன் நினைவாய்
இம்முத்துக்க‌ளை எடுத்துக்கொள்கிறேன் என்றேன்
பூவாய் சிரித்தாய்
இப்போதும் க‌ண்ணீர் துளிர்த்த‌து
ஆனால் ஆன‌ந்த‌மாய்

க‌ல்லூரி விடுமுறையில்
வீட்டிற்கு ப‌ய‌ண‌ம்
உன் நினைவுக‌ளை சும‌ந்த‌ப‌டி
வீட்டின் வாச‌லில்
என்னை தேடும் க‌ண்க‌ளையே
எப்போதும் என் க‌ண்க‌ள் தேடும்
அழ‌கான உன் க‌ரு இரு விழிக‌ளை
என் விழிக‌ள் நோக்கினால்
அவை நில‌ம் நோக்கும்
நான் புன்ன‌கையுட‌ன், நாண‌மும்
உன்னைப்போல‌ அழ‌கென்றேன்

நான்கு ஆண்டுக‌ள் முடிவில்
க‌ல்லூரி தோழியுட‌ன்
வீட்டிற்கு வ‌ந்தேன்.
என் தேவ‌தையை அவ‌ளுக்கு அறிமுக‌ப்ப‌டுத்த‌!
என்னை பார்த்து சிரித்த‌ விழிக‌ள்
என் தோழியை பார்த்து அழ‌ ஆர‌ம்பித்த‌து
தோட்ட‌த்தில் இருந்த‌ என் செல்ல‌ ம‌ர‌த்தை
க‌ட்டிக்கொண்டு அழுது கொண்டிருந்தாய்
நான் சிரித்து விட்டு
"முக‌ம் காட்ட‌ வேண்டிய‌ நிலா
இன்று ஏன் முதுகு காட்டிக் கொண்டிருக்கிற‌து" என்றேன்
முன்னமும் வேக‌மாய் அழுதாய்
உன் பாச‌மும் அழ‌கென்றேன் !
உன் க‌ண்ணீர் ம‌ழை அருவியான‌து
என் கைகுட்டையில் இருந்த‌
இரு க‌ண்ணீர் க‌ரைக‌ளைக் காட்டி
என் க‌ண்க‌ள் இங்கிருக்கும்போது
இன்னொரு பெண்ணை எவ்வாறு பார்க்கும் என்றேன்
என் க‌ழுத்தைக்கட்டிக்கொண்டு
ச‌த்த‌மாய் அழுதாய்
ஆனால் ஆன‌ந்த‌மாய் !
நான் தேற்ற‌ வேண்டுமென்று மீண்டும் அழுதாய்
உன்னை தேற்றாம‌ல் காத‌லித்துக்கொண்டிருந்தேன் க‌ண்ணீருட‌ன்.
ந‌ம்மை வாழ்த்தி கண்ணீர் போல‌
ப‌ன்னீர் பூக்க‌ளை செறிந்த‌து
நான் வள‌ர்த்த‌ செல்ல‌ ம‌ர‌ம்.

No comments: