கரை மீது கொண்ட காதலால்
அதை அணைத்துப் போனது கடலலை
என்று முடியும் இந்த காதல் போராட்டம்
கரை ஏற்றுக் கொள்ளுமா அலையின் காதலை?
கடல் மீது கொண்ட காதலால்
கடலை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தான் கதிரவன்
காதலியை தழுவப்போவதை எண்ணியதால்
அவன் முகம் நாணத்தால் சிவந்திருந்தது
கதிரவனின் ஒரு நாள் பிரிவையும் தாங்கமுடியா கடல்
தன் காதலனாயை எட்டி அணைக்க முயன்று கொண்டிருந்தாள்
இவர்களின் காதல் விளையாட்டை
கரையில் நின்ற கலங்கரை விளக்கு
கண் சிமிட்டி பார்த்துக் கொண்டிருந்தது.
அழ்கடலின் அரவாரத்துடன், மக்களின் விசும்பல் கலந்திருந்தது
கைகளில் வலையுடன் கண்களில் நீருடன்
விடைபெறும் இவர்கள் மீனவர்கள்.
நாளை உதயம் பார்ப்போம் என்ற நம்பிக்கையுடன்
கடலாடும் மனிதர்கள் இவர்கள்
கட்டிய மனைவி கண்ணீருடன் வழியனுப்ப
கடலொடும் இவர்கள் நாளை கரைகாண்பது யார் கையில்
கரையில் காத்திருக்கும் காதல் மனைவிக்கு
நாளைய பரிசு அன்புக் கணவனின் முத்தமா அல்லது
துப்பாக்கித்தோட்டா முத்தமிட்ட அவனது உயிரற்ற உடலா ?
துருவ நட்சத்திரத்தை துணையாக்கி
பயணப்படும் இவர்கள்
தன் காதலிக்கு கூறிய ஆறுதல் வார்த்தைகள்
" ஆழ்கடலில் மூழ்கினாலும் கலங்காதே என் கண்ணே
உன்காது மடலில் முத்தமிடும் முத்தாவேன்
உன்காதோடு காதலுடன் கவிதைபாடுவேன் என்றென்றும் "
ஆறுதல் வார்த்தைகள் அழுகையை வரவைத்தது ஏன்?
தண்ணீரில் ஓடமிடும் இவர்கள் கண்ணீரில் வாழும் மீன்களானது ஏன்?
கண்ணைப்பறிக்கும் மின்னலில்
கடலில் மீன் பறிக்கும் இவர்களுக்கு
சுனாமியும், சுறா மீனும் ஒன்றுதான்
இவர்கள் நீலக்கடலில் வலைவீசிப் பிடிப்பது
நாளைய வாழ்வின் வசந்தத்தை!
எல்லையில்லா அன்பு கொண்ட கடலுக்கு
எல்லை வகுத்தவர்கள் யார்?
அவர்கள் தன் தாயின் அன்பிற்கும்
எல்லை வகுத்திருப்பார்கள்
எங்கும் நீர் நிரம்பிய கடலில்
இவர்களால் எவ்வாறு எல்லைக் கோடிடமுடிந்தது
எல்லை தாண்டிய இவர்கள் மேல்
இலங்கை வீரர்களுக்கு இரக்கம் இல்லாமல் போனது ஏன்?
மனிதனை மனிதனாய் மதிக்க தெரியாதவர்கள்
மகிந்தனின் வீரர்களாய் இருப்பதில் வியப்பில்லை!
அலைகடலுடன் போராடும் எங்களை
ஆயுதம் எடுத்து போராடவைக்காதீர்கள்
முடிவென்பது ஒன்று உண்டு
அது எங்கள் அமைதிக்கும் உண்டு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment