Monday, September 15, 2008

உடைந்த‌ இத‌ய‌ம்

என் க‌ண்ணின் பாவையான‌ பாவையே
சில‌ ஆண்டுக‌ள் முன்
  நான் த‌னிம‌ர‌மாய் இருந்தேன்
என்னில் நீ க‌ட்டிய‌ காத‌ல் என்ற‌ கூட்டினால்
  நீயே என் துணையென‌ உண‌ர்ந்தேன்
நாம் காத‌லித்த‌ நாட்க‌ளில்
  ந‌ம்மை உல‌க‌ம் சுற்றுவ‌தாய் உண‌ர்ந்தேன்
பூக்கும் பூவெல்லாம்
  உன‌க்காக‌ பூப்ப‌தாக‌ கொண்டேன்
உன‌க்காக‌ காத்திருக்கும் ஒவ்வொரு
  விணாடியும் ர‌ண‌மான வ‌லியே
அந்த வ‌லியும், நீ பூக்கும் புன்ன‌கையில்
  ம‌றைந்து போகும‌டி என் பிரிய‌ச‌கி

நீயே நினைவானாய், என் எழுத்தானாய்
என் எண்ண‌மானாய், என் உயிரின் உயிரானாய்
என்னுள் க‌ருவான‌ காத‌லை
  க‌விதையாய் பிர‌ச‌வித்த‌வ‌ளும் நீயே
பிற‌ந்த‌து காத‌ல் என்ற‌ குழ‌ந்தையடி
  அதை எவ்வாறு கொல்ல‌த்துணிந்தாய் நீ!
நீ க‌ட்டிய‌ காத‌ல் என்ற‌ கூட்டை
  நீயே க‌லைக்க‌த் துணிந்தாய் ஏன‌டி !
"ம‌ற‌ந்து விடு" என்ற‌ ஒற்றை வார்த்தையில்
  இடியை இற‌க்கிப்போனாய் என் இத‌ய‌த்தில்
க‌ருகிய‌ பூவான‌து என் இத‌ய‌ம் !


நாம் ந‌ட‌ந்த‌ த‌ட‌த்தை
  அழிக்க‌வும் அஞ்சிநின்ற‌து அலை
ஆனால் நீயே அதை அழித்துப் போனாய் ஏன‌டி
என்ன‌வ‌ள் என்ற‌ உரிமையுட‌ன் இருந்தேன்
  ம‌ன‌ம் ஏற்க‌ ம‌றுக்கிற‌து
நீ இல்லை என்ப‌தை!
விழித்து விழித்து பார்க்கிறேன்
  நீ சொன்னதெல்லாம் பொய்யாகும்
நட‌ந்த‌தெல்லாம் க‌ன‌வாகும் ஆசையுட‌ன்
க‌ண்க‌ளையும் நீ திருடிச் சென்ற‌ப்பின்
  தூக்க‌மும் அதில் வ‌ரும் க‌ன‌விற்கும் வ‌ழியேது!

கிழ‌க்கே உதிக்காத சூரிய‌ன்
நில‌வில்லா பெள‌ர்ன‌மி
உயிரில்லா உட‌ல்
க‌ண்ணீர் இல்லா க‌ண்க‌ள்
வார்த்தை இல்லா க‌விதை
நீ இல்லா என் வாழ்கை
இவையாவும் அர்த்த‌ம‌ற்ற‌வை!
நின்றுபோன‌  க‌டிகார‌மானேன்
 நீ சொன்ன‌ "மற‌ந்து விடு" என்ற‌ வார்த்தையில்!
உன்னை மண‌க்கோல‌த்தில் இன்னொருவ‌னுட‌ன் பார்க்கும் முன்
ம‌ர‌ண‌த்தை ம‌ணந்து ம‌ரித்துப்போகிறேன‌டி!
இது என் உயிர் தீப‌ம் எரியும் க‌டைசி நிமிட‌ம்
இந்த‌ உல‌க‌த்திற்கு உர‌க்க‌ச்சொல்கிறேன் ‍
  நான் இற‌க்கும் முன் 
  கால‌மும் அழிக்க‌ முடியாது என் காத‌லை
  நீ என்னவ‌ள் என்ற‌ உரிமையை ப‌றிக்க‌வும் முடியாது.

No comments: