Wednesday, August 6, 2008

குழ‌ந்தை தொழிலாள‌ர்க‌ள்

இள‌ந்த‌ளிராய் இப்பூமியில்
இளையுதிர் கால‌த்தில் பிற‌ந்தோம்
வ‌ள‌ரும் முன் வீழ்ந்து போனோம்
குழ‌ந்தை தொழிலாள‌ர் என்ற‌ அடையாள‌மாய்

பிற‌க்கும் போதே தேய்பிறையானோம்
வாழ்க்கை விடியாத‌ நீண்ட‌ இர‌வான‌து
வ‌றுமையின் வ‌ர‌பிர‌சாத‌மாய்
பிற‌க்கும்போதே நாங்க‌ள் தொழிலாள‌ர்க‌ளானோம்

க‌ண்க‌ள் நிறைய‌ க‌ன‌வுக‌ளுட‌ன்
வாழ்க்கை நிறைய‌ வ‌றுமையுட‌ன்
வாழும் நாங்க‌ள்
நாளைய‌ இந்தியாவின் ந‌ம்பிக்கை

இந்தியாவின் எதிர்கால‌ம்
குழந்தைக‌ளின் கையில்
எங்க‌ளின் கையிலோ குப்பைக‌ள்
த‌ங்கையின் ப‌சிக்காக‌
த‌ந்தையின் குடிக்காக‌
தாயின் ம‌ருந்துக்காக‌
இப்ப‌டி எதோ ஒரு கார‌ண‌த்திற்காக‌
நாங்க‌ள் ஆக்கப்ப‌ட்டோம் தொழிலாள‌ர்க‌ளாய்

விடிய‌லை நோக்கி ஒரு ப‌ய‌ண‌ம்
விடியும் முன்
திசை தெரியா வாழ்க்கை க‌ட‌லில்
கல்வி என்னும் துடுப்பில்லா ப‌ய‌ண‌ம்
எங்க‌ளுக்கு
கை கொடுங்க‌ள்
கல்வி கொடுங்க‌ள்
க‌ட‌வுளாவீர்க‌ள்

No comments: