அதிகாலை! சேவல் துயில் எழுப்ப
அம்மா பாசத்துடன் தந்த பழைய சாதம் அமுதமாய் இருந்தது
அப்பாவுடன் வயலுக்கு நடைபயணம்
தொட்டாச்சினுங்கியை தொட்டுக் கொண்டே!
வாய்க்கால் நீருடன் ஒட்ட பந்தையம்
எப்போதும் எனது நண்பணே முந்துவான்
ஓடும் வாய்க்கால் நீரின் இன்னிசையில்
உறங்கிய நிமிடங்கள் எத்தனை!
அப்பாவுடன் ஏர்பிடித்து உழுத தருணங்கள் எங்கே!
அக்காவுடன் தட்டான் பிடித்து விளையாடிய நாட்கள் எத்தனை!
பள்ளிக்குச் சென்ற இனிமையான சைக்கிள் பயணங்கள்
நண்பர்களுடன் பகிர்ந்துண்ட மதிய உணவு
அக்காவுடன் சென்ற அழகான கோவில்
சாமியை கண்டு பயந்த நாட்கள்
கவிதையாய் இருந்த என் வாழ்க்கை
இன்று காலம் கிழித்துப்போட்ட காகிதமாகிப்போனது ஏன்?
இன்று கணிப்பொறியுடன் வாழ்க்கை
கைநிறைய பணம் இருந்தும்
மனம் நிறைய மகிழ்ச்சி இல்லை!
எல்லா உணவகத்திலும் தேடுகிறேன்
எனது அம்மா தந்த பழைய சாதத்தை!
தொலைவில் இருந்தாலும் அவ்வப்போது
பேசி நலம்விசாரிக்கும் கணமான தொலைபேசி தருணங்கள்!
பேசிய பிறகு துளிர்க்கும் கண்ணீருடன் சென்ற அலுவலகம்!
விடுமுறையை எண்ணிக் கொண்டே செய்யும் வேலைகள்!
நாட்குறிப்பில் கண்ணீருடன் எழுதிய
அக்காவின் பிறந்த நாள்!
அம்மா அப்பாவின் திருமண நாள்!
சொந்தத்தை தொலைத்தவனின் அழுகுரல்
இந்த நகரத்தின் சத்தத்தில் யாருக்கும் கேட்காமலே போனது ஏன்?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment