ஒரு கானி நிலம்
காலை முதல் மாலை வரை
இடைவெளி இல்லாமல் உழைக்கும் வர்கம்
காவிரியில் நீரில்லை,
வங்கியில் கடன் இல்லை,
கடையில் உரமில்லை
எங்கும் இல்லை என்ற வார்த்தை தவிர வேறில்லை
இவன் இன்னொருவன் பசிக்காக உழைக்கும் ஒரு வர்கம்
மழை பொய்த்து போனாலும்
சூரியன் எழாமல் போனாலும்
இவன் உழைப்பதை நிறுத்தியதில்லை!
விடியலே இல்லாமல் போன இவனுக்கு
நிலமெல்லாம் நெல்லானாலும்
அவனுக்கு பொங்கலுக்கு மட்டுமே அரிசி சாதம்!
தலை நிமிர்ந்து வாழவேண்டிய ஒரு வர்கம்
இன்று நிமிர முடியாமலே போனது ஏன்?
அடிமையாய் தன்னையே விற்று
தன் வம்சத்தின் பசித்தீர்க்கும் ஒரு வர்கம்
தொன்னூறு நாட்கள் தன் கருவறையில்
சுமந்த தன் குழந்தையை
பிரசவித்த அவனுக்கு
எஞ்சியது பசி மட்டுமே!
கண்கள் நிறைய ஏக்கத்துடன்
காலமெல்லாம் இவன் உழைத்தாலும்
கடைசியில் கிடைப்பது கடன் மட்டுமே!
வியர்க்கும் வியர்வையை
வயலுக்கு உரமாக்கி
இவன் விளைவித்த நெல்லுக்கு
கேட்பதெல்லாம் நியாயமான விலை!
சொகுசு காரில் குளுகுளு அறையில்
பசி என்பதே அறியாமல் இருக்கும் அதிகாரிகளுக்கு
ஒட்டிய வயிறுடன் உலர்ந்த நாக்குடன்
இவன் எழுப்பும் கூக்குரல் கேட்காமலே போனதில் வியப்பில்லை
உழைக்கும் வர்கம்
தற்கொலையை மட்டுமே அறுவடை செய்துகொண்டிருக்கிறது
அதிகாரவர்கமே!
கண்ணாடி கூண்டிலிருந்து வெளியே வாருங்கள்
உழவனின் கண்ணீர் துடைப்போம்
விளைநிலங்கள் எல்லாம் சவ நிலங்களாக மாறும் முன் தடுப்போம்!
முற்றுப்புள்ளி வைப்போம் உழவனின் கண்ணீருக்கு.
விடியலை மறந்து போன அவனுக்கு சூரியனை பரிசளிப்போம்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment