பூக்களில் படர்ந்திருக்கும் பனிபோல்
உன் கூந்தலிருந்து விழும் நீர்!
மஞ்சள் பூசிய முகம்
என் எதிரில் நிலவை நிறுத்தும்!
அதில் ஏற்றிவைத்த அகல் விளக்கு போல்
உன் நெற்றியில் இட்ட குங்குமம்!
பட்டை வருடிப்போகும் இறகு
நீ உடுத்தி இருக்கும் புடவை
பூமிக்கு வலிக்காமல் நடக்கும்
அன்னம் போன்ற நடை!
யாழின் இசைப்போல் ஒலிக்கும்
உன் கொலுசின் முத்துக்கள்
என்னை தீண்டும் பஞ்சையொத்த விரல்கள்
அதைவிட மென்மை எங்குமில்லை!
எட்டாவது சுவரமாய் ஒலிக்கும்
உன் குரல்!
செல்லமாய் கோபப்படும்போது
அழகாய் சிவக்கும் கண்ணங்கள் !
நீர்சுழலாய் கண்ணத்தில் விழும் குழி
அதில் விழுந்த எனக்கு எழ மனமில்லை!
இவ்வளவும் நீ துகில் எழுப்பும் மட்டுமே கிடைக்கிறது
நீ இன்னெறுமுறை எழுப்பவேண்டுமென்றே
மீண்டும் உறங்குகிறேன்!
மீண்டும் உன் அழகை இரசிப்பதற்கு!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment